காளஹஸ்தி சிவன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2024 08:10
காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் துர்கை அம்மன் மற்றும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் நவராத்திரி விழாவில் ஆறாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
இதே போல் காளஹஸ்தி அதன் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள பானகல் பகுதியில் வீற்றிருக்கும் பொன்னாலம்மன் சரஸ்வதி தேவி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். இதேபோல், காளஹஸ்தி பஜார் தெருவில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் ஸ்வர்ண சரஸ்வதி தேவி அலங்காரம், வேடாம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தட்சிண காளிகாதேவி கோயிலில் சரஸ்வதி தேவி அலங்காரம், பிபி அக்ரஹாரத்தில் உள்ள சிறிய கங்கையம்மா கோவிலில் அம்மன் சரஸ்வதி தேவி அலங்காரம், பிபி அக்ரஹாரத்தில் உள்ள பெரிய கங்கையம்மன் தேவஸ்தானத்தில் சரஸ்வதி தேவி அலங்காரம், பாஸ்கர்பேட்டை ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலில் அம்மன் சரஸ்வதி அலங்காரம். பகதூர் பேட்டை தெட்டில் உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலில் சரஸ்வதி தாயார் அலங்காரம், பகதூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.