சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை நடக்கிறது.சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் தேள்கரடு வீதியில் உள்ளது ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில். இக்கோவிலில் விநாயகர், ஸ்ரீமகாமாரியம்மன் மற்றும் கருப்புசாமி ஆகிய சுவாமிகள் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம், நாளை காலை ஆறு மணிக்கு மேல் நடக்கிறது.பவானி ஆறு மற்றும், ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாடு, மகாகணபதி ஹோமம், நவகிரகஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது.நாளை அதிகாலை நான்காம் கால வேள்வியும், காலை, 6.30 முதல், 7.30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை கூனம்பட்டி மடம் மாணிக்கவாசகர் மடாலயம் நடராஜசுவாமிகள் தலைமையில், மணிகண்டசிவம் ஆகியோர் செய்கின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, நான்கு மணிக்கு மேல் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.