திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 12:10
மயிலாடுதுறை; அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அண்ணன் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு திருப்பதி பெருமாளை சேவித்த பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பெருக்கில் கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். இதனை அடுத்து நாளை 13ஆம் தேதி கொடி இறக்கமும், 14ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் தலைமையிலானூர் செய்துள்ளனர்.