பதிவு செய்த நாள்
12
அக்
2024
05:10
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள, கருமலை ஸ்ரீபாலாஜி கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையான இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையான இன்று வால்பாறை அடுத்துள்ள கருமலை ஸ்ரீபாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு கணபதி ஹோமமும், 5:00 மணிக்கு பெருமாளுக்கு, பால், மஞ்சள், குங்குமம், இளநீர், சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. தொடர்ந்து விநாயகர், ஆஞ்சநேயர், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என, பஜனை பாடல்களை பாடி இறைவனை மகிழ்வித்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.