பதிவு செய்த நாள்
12
அக்
2024
05:10
கடலுார்; கடலுார் திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கல்வி துவக்க நிகழ்ச்சி நடந்தது.
விஜயதசமி தினத்தன்று, சரஸ்வதி தேவிக்கு, லட்சுமி ஹயக்ரீவர் உபதேசம் செய்தார். அன்றைய தினத்தில் ஹயக்ரீவரை வணங்கி, படிப்பை துவக்கினால் குழந்தைகள் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். விஜயதசமி தினமான இன்று கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் எதிரில் மலை மீது அமைந்துள்ள லட்சுமி ஹயக்கிரீவர் சன்னதியில், குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்ற கல்வி துவக்க நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக விஜயதசமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஹயக்கிரீவர் சன்னதியில் தரையில் நெல் மற்றும் அரிசியைக் கொட்டி, அதில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் கை விரலை பிடித்து அ, ஆ என்ற அரிச்சுவடி எழுதப் பழகினர்.