ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும். ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “இந்திரா ஏகாதசி” எனப்படுகிறது. பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு. இன்று விரதமிருந்து பெருமாளை வழிபட பாவம் மட்டுமின்றி முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.