அயோத்தியில் தீப உற்சவம் ; 25 லட்சம் விளக்குகள் தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2024 02:10
அயோத்தி; அயோத்தி குழந்தை ராமர் கோயிலில் தீபாவளி சிறப்பாக கொண்டாட உள்ளது. தீபாவளியையொட்டி, 8 வது தீப உற்சவம் கொண்டாட உத்தர பிரதேச அரசு ஏற்பாடு செய்துள்ளது. சரயு நதிக்கரையை சுற்றிலும் 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. இதற்காக மண் விளக்குகள் பல டிசைன்களின் அலங்கரித்து வைத்துள்ளனர். அத்தனை விளக்குகளும் இன்று இரவு ஏற்றப்பட உள்ளதால் அயோத்தி ஜெலிக்க போகிறது.
சஹஸ்ர சண்டி விஸ்வ சாந்தி மகாயக்ஞம்; ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர நியாஸ், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மற்றும் சின்மயி சேவா நியாஸ் சார்பில் ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள யாகசாலையில் ஸ்ரீ மஹா நாராயண திவ்ய ருத்ர சஹிதா ஷடத்தை சுமூகமாக நடத்துவதற்கான மூன்று நாள் வழிபாடு நடைபெற்றது. நவம்பர் 18ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்படும் சஹஸ்ர சண்டி விஸ்வ சாந்தி மகாயக்ஞ வழிபாட்டில் விக்னேஷ்வர் பூஜை, பூமி பூஜை மற்றும் வனதுர்கா மஹாவித்யா ஹவன் ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராம் ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் ஸ்ரீ சம்பத் ராய் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.