பதிவு செய்த நாள்
01
நவ
2024
08:11
உடுமலை; உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தீபாவளி பண்டிகை, அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சிவன், பிரம்மா, விஷ்ணு மும்மூர்த்திகளை வழிபட்டனர். அதே போல், திருமூர்த்திமலைப் பகுதிகளில் மழை பொழிவு குறைந்து, மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீர் வரத்து மிதமாக இருந்தது. இதனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அருவிக்கு அனுமதிக்கப்பட்டதால், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். வழக்கமாக அமாவாசை நாளில் அதிகளவு பக்தர்கள், திருமூர்த்திமலை கோவிலுக்கு வரும் நிலையில், தற்போது அருவிக்கும் அனுமதிக்கப்படுவதால், தொடர் விடுமுறை காரணமாகவும், பொதுமக்கள் வருகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.