Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் முருகன் கோவில்களில் கந்த ... மகா பெரியவா அனுஷ பூஜை பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை மகா பெரியவா அனுஷ பூஜை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரிமுனை கந்தகோட்டத்தில் கோடி அர்ச்சனை விமரிசை
எழுத்தின் அளவு:
பாரிமுனை கந்தகோட்டத்தில் கோடி அர்ச்சனை விமரிசை

பதிவு செய்த நாள்

04 நவ
2024
01:11

பாரிமுனை; பாரிமுனையில் கந்தகோட்டம் கந்தசுவாமி கோவில் எனும் முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் உள்ளது. இங்கு, கந்த சஷ்டி திருவிழா 2ம் தேதி துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமியை தரிசிப்பர். இரண்டாவது நாளான நேற்று காலை, முத்துக்குமார் சுவாமி சிறப்பு அபிஷேக, புஷ்ப அலங்காரம் நடந்தது. கந்த சஷ்டி கோடி அர்ச்சனை திருவிழா நடந்தது. இதில், மூலவர், உற்சவர், ஞான தண்டாயுதபாணி, ஆறுமுகம் ஆகிய சன்னிதிகளில் அர்ச்சனை செய்யப்பட்டது. 1,008 சகஸ்ரநாம மந்திரங்கள் படிக்கப்பட்டன. வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்ட வைபவங்களுடன், கோடி அர்ச்சனை, மிக சிறப்பாக நேற்று நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது. கோவில் கலையரங்கத்தில், முரளிதரண் குழுவினரின் இன்னிசை, ஜே.சிவரஞ்சினி குழுவினரின் பக்தி பாடல்கள், ஆசிரியர்கள் கீதாராணி, மஞ்சு ஸ்ரீ, ஸ்ரீ சங்கீத வித்யாலயா சரிகம இசை பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்வான 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழாவும், 8ல் தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; ‘மத்திய திருப்பதி’ என்று அழைக்கப்படும் பஞ்சவடி கோவில், திண்டிவனம் – புதுச்சேரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ; சிருங்கேரியில் உள்ள தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்தாபகரான ஸ்ரீ ஆதி சங்கர ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் பாவை நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar