பதிவு செய்த நாள்
06
நவ
2024
10:11
பழநி; பழநி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க உள்ள சூரன்கள் தயார் செய்யப்படுகிறது.
பழநி கோயில் கந்த சஷ்டி விழா நவ., 2 முதல் நடைபெற்று வருகிறது. நாளை முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. பழநியில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில், முறையே தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் என நான்கு சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். அதற்கான உருவ பொம்மைகள், பெரியநாயகி அம்மன் கோயிலில் பரம்பரையாக செய்து வரும் நபர்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. சூரன்களுக்கு உடைய ஆயுதங்கள், கம்பீர உடல் அமைப்பு ஆகியவை வண்ண வண்ண காயிதங்கள் மூலம் அலங்கரித்து தயார் செய்கின்றனர். மேலும் சூரர்களின் தலைகளை பிரத்தியேகமாக தயார் செய்து, இன்று சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து சூரர்கள், உடல்களுடன் பொருத்த உள்ளனர். நாளை காலை தயாராக உள்ள சூரன்கள், சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க காலையில் கிரிவீதிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்வர்.