பதிவு செய்த நாள்
06
நவ
2024
11:11
சென்னை; சென்னை மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் தங்கியுள்ள சிருங்கேரிவிதுசேகர பாரதீ சுவாமிகளைகவர்னர் ரவிசந்தித்து ஆசி பெற்றார்.ஆதிசங்கரர், அவரது உபதேசங்கள் குறித்து அவருடன், ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடினார்.
விஜய யாத்திரையாக, அக்., 28 இரவு சென்னை வந்த சிருங்கேரி ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். ஒன்பதாவதுநாளான நேற்று காலைசுவாமிகளிடம்கவர்னர் ரவிஆசி பெற்றார். ஆதிசங்கரர் பற்றியும், அவரது தத்துவ உபதேசங்கள் பற்றியும்ஒன்றரை மணி நேரம் இருவரும்உரையாடினார். இது தொடர்பாக, கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட பதிவில், ‘மயிலாப்பூரில் தங்கியுள்ள சிருங்கேரி ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளை கவர்னர் ரவி வணங்கி, தமிழக மக்கள் அமைதி மற்றும் நலம் பெற, அவரது தெய்வீக ஆசியை வேண்டிக் கொண்டார்’ என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, தேனாம்பேட்டையில் சிருங்கேரி சங்கர மடம் சார்பில் நடத்தப்படும் ‘தத்வலோகா’ ஆன்மிக மையத்திற்கு நேற்றிரவு 7:30சுவாமிகள் சென்றார். அங்கு அவர் வழங்கியஅருளுரை: வெளிநாடுகளில் நடப்பதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால், எமதர்மராஜன் இருக்கும் நரகம் பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை. நமது சாஸ்திரங்கள் காட்டும் தர்ம வழியில் வாழ்வை நடத்தாவிட்டால், நரகத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டியிருக்கும். தனக்கு நன்மை தரும் செயல்களைத்தான் ஒருவர் செய்ய வேண்டும். இதை நமது வேத தத்துவங்கள் சொல்கின்றன. கடவுளின் சிலை எல்லோருக்கும் தரிசனம் தரும். எல்லோரையும் சமமாக மதிக்கும்.நடந்து முடிந்தவற்றை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், வாழ்வில் முன்னேறவே முடியாது.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும். அதுபோல நமக்கு நல்லது செய்தவர்களை, மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். புரியாத விஷயங்கள் அனைத்தும் தவறு என, சிலர் விதண்டாவாதம் செய்வார்கள். இது தவறு என்று நம் ஆன்மிக தத்துவங்கள் வலியுறுத்துகின்றன. அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அருளுரை வழங்கினார்.