பதிவு செய்த நாள்
06
நவ
2024
04:11
திருப்போரூர்; திருப்போரூர் பேரூாரட்சி, 11வது வார்டு, கன்னியம்மன் கோவில் தெருவில், புதிதாக கட்டப்பட்டுள்ள வாராஹி அம்மன் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், முதல் கால யாக சாலை பூஜையும் நடந்தன. இன்று அதிகாலை 5:00 மணி முதல் சாந்தி ஹோமம், கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு விமான கலசத்திற்கும், மூலவர் வாராஹி அம்மன் சிலைக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.