பிள்ளையார்குளத்தில் மழை வேண்டி செவ்வாய் கொழுக்கட்டை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2024 10:11
சாயல்குடி; சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் வடக்குவா செல்வியம்மன் கோயிலில் மழை வேண்டி நேற்று முன்தினம் இரவு செவ்வாய் கொழுக்கட்டை பூஜை நடந்தது.
மூலவர் வடக்குவா செல்வி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பிள்ளையார் குளம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் பனை ஓலை பெட்டி, பாத்திரங்களில் சோறு மற்றும் பெட்டைக்கோழி இறைச்சி குழம்பை படையலாக அம்மன் முன் வரிசையாக அடுக்கி வைத்தனர். பூஜைகளை அர்ச்சகர் பிரேம்குமார் செய்திருந்தார். மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. தீபாராதனை காட்டும் போது ஏராளமான பெண்கள் குலவை எழுப்பினர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோழி இறைச்சி சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பிள்ளையார் குளம் பொதுமக்கள் செய்திருந்தனர்.