ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் கிராமத்தில், அய்யப்ப சுவாமி விளக்கு பூஜை சிறப்பாக நடந்தது.இங்குள்ள, ஸ்ரீஅன்னபூர்ணம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், கடந்த, 24ம் தேதி மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை, விளக்கு பூஜை நடந்தது. செண்டை மேளத்துடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.