விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கவுசிக ஏகாதசியை முன்னிட்டு விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் உள்ள, மூலவர் பெருமாளுக்கு நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து மாலை 6 மணிக்கு பெருமாள் கருட வாகன சேவையில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சன்னதி புறப்பாடு நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.