புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், லட்சதீப பெருவிழா நேற்று நடந்தது.வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, 11ம் ஆண்டு லட்சதீப பெருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை 6 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து, கோவில் வளாகத்தில் தீபங்களை ஏற்றினர்.சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை உபயதாரர் அன்பு, கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.