பதிவு செய்த நாள்
29
நவ
2024
10:11
அவிநாசி; திருமுருகன்பூண்டி கோவிலில் நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் ஆலய பிரவேசம் நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோவிலில் நேற்று 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் உற்சவமூர்த்திகளின் ஆலய பிரவேசம் நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க வேத பாராயணம், தேவாரம், பன்னிரெண்டு திருமுறை பாராயணம் ஆகியவற்றுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு நாயன்மார் மற்றும் தொகையடியார் விக்கிரகங்கள் கண் திறப்பு நிகழ்ச்சியும், விக்னேஸ்வர பூஜை, புன்யாக வாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை மற்றும் பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து, ஹோம பூஜை, அபிஷேகம், அலங்காரம் தொடர்ந்து மாலையில் திருவீதி உலா நடைபெறுகிறது.