செஞ்சி; செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் 3ம் ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி, செத்தவரை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் இருந்து கருப்பசாமி காவலுடன் ஐயப்ப சுவாமிக்கு திருவாபரண பெட்டியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து வேள்வி பூஜை, மஹா பூர்ணாஹூதி, 108 சங்காபிஷேகம், மலர் அலங்காரம், மகா தீபாரதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் ஐயப்பன் வீதியுலாவும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.