பதிவு செய்த நாள்
29
நவ
2024
05:11
விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், பாலாலய திருப்பணி நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, நேற்று (28ம் தேதி) மாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி, இரவு 8:30 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 6:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9:45 மணிக்கு பாலாலய நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் கோவில் திருப்பணிக்காண பூமிபூஜை நடந்தது. இதில், அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு கோவில் திருப்பணிக்கான பூமிபூஜையை துவக்கி வைத்தார். திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக பராமச்சாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் திருப்பணி கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநியை துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், நிர்வாக அதிகாரி பழனியம்மாள், தி.மு.க., ஒன்றிய செயலர் கனக கோவிந்தசாமி, வேல்முருகன், நகர வர்த்தகர் சங்க தலைவர் கோபு, கே.எஸ்.ஆர்., பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல், வெங்கடேஸ்வரா கல்வி குழும தாளாளர் வெங்கடேசன், ஊராட்சி தலைவர் நீதிராஜன், வழக்கறிஞர்கள் விஜயகுமார், அருள்குமார், நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேல், தி.மு.க., ஒன்றிய துணை செயலர் தர்ம மணிவேல் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.