கோவை; கர்நாடக மாநிலம் சிக்மகளூரிலுள்ள ஹரிஹரபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் கோவைக்கு மூன்று நாட்கள் விஜயம் செய்கிறார்.
ஹரிஹரபுரம் ஸ்ரீமடத்தின், 25 வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் கோவைக்கு வரும் டிச.,9 அன்று வருகை தருகிறார். அன்று மாலை, 6 மணிக்கு ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மங்கல வாத்தியங்கள் முழங்க, மேள தாளங்களுடன் பூர்ண கும்பத்துடன் பக்தர்கள் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கின்றனர். ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மஹாஸ்வாமிகள் தலைமையில் மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சக்ரநவாவர்ண பூஜை கோதண்டராமர் கோவிலில் நடக்கிறது. டிச.,10 அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை துர்கா சந்திரகலா ஸ்துதி மற்றும் அபிராமி அந்தாதியை லட்சுமி மஹாதேவன் குழுவினர் பாராயணம் செய்கின்றனர். மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சக்ரநவாவர்ண பூஜை நடக்கிறது. டிச.,11 அன்று காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பாராயணம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமிகளின் அனுக்கிரஹ பாஷனமும், மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜையும்நடக்கிறது. மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பாதபூஜை, நவாவர்ண பூஜை, பிக் ஷா வந்தனம், நித்யபுஷ்பசேவை, வஸ்திரதானம் மற்றும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மடம் நிர்வாகிகள் செய்துள்ளனர்.