பதிவு செய்த நாள்
06
டிச
2024
12:12
திருச்சி; திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, 52 லட்சம் மதிப்பில் முஸ்லிம் பக்தர் உட்பட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160 க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்த அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர். திருச்சி கோபால் தாஸ் ஜெம்ஸ் அண்ட் ஜுவலர்ஸ் நிறுவனத்தினர், இந்த கிரீடத்தை உருவாக்கி உள்ளனர்.
கோபால் தாஸ் ஜெமஸ் அண்ட் ஜுவல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் மேனேசிங் டைரக்டர் டில் ஜாத் சி. ஷாஹ கூறியதாவது: நாங்கள் சமயபுரம் கோவில், மகா பெரியவா போன்றவர்களுக்கு கிரீடம் செய்து கொடுத்து உள்ளோம். அதற்காக மகா பெரியவரின் ஆசிர்வாதம் கிடைத்தது. தற்போது இந்த கிரீடம் செய்யும் பணியில் ஆறுதொழிலாளர்கள் ஈடுபட்டு, 34 கேரட்டில் 619 வைரங்கள், கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்கள் கடைசல் வேலை செய்தும், எமரால்டு இன்கிரீமிங் செய்து, 40 நாட்களில் பக்தியுடன் ஆத்மார்தமாக பணியில் ஈடுபட்டு தயார் செய்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை ரங்கநாதருக்கு சாத்தப்படும் கிரீடத்தை செய்ய கிடைத்த வாய்ப்பு பெருமை. இந்த கிரீடத்தை செய்ய முஸ்லிம் பக்தர் ஒருவர் வேறு சிலரிடம் நன்கொடை பெற்றுக் கொடுத்ததாக கூறுகின்றனர். இப்பணிக்காக ரங்கநாதருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த புதிய கிரீடம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதருக்கு வரும்11ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது.