காவிரியை காவேரி என்றும் சொல்வர். காகம் விரித்த (உருவாக்கிய) நதி என்பதாலும், பாயும் இடம் எல்லாம் காவினை(சோலையை) விரித்ததாலும் காவிரி என்று பொருள் சொல்வர். ராஜரிஷியான கவேரரின் புத்திரியே காவேரி. அவரது பெயராலேயே காவேரி என்ற பெயர் வந்ததாகவும் சொல்வர். மகளை வீட்டை விட்டு வெளியே கூட விடாமல், குலதர்மப்படி வளர்த்து வந்தார் கவேரர். அவள் அகத்திய முனிவரைத் திருமணம் செய்து கொண்டாள். அதன்பின்பு, அவரின் அன்புக் கட்டளைக்கு கட்டுப்பட்டு, ஒரு கமண்டலத்தில் இருந்தாள். கடைசி வரை வெளியே வராமலே இருந்த காவேரி, விநாயகரின் கருணையால் சுதந்திரம் பெற்றாள். இன்று எல்லார் கண்ணுக்கும் தெரியும் வகையில் பரந்து விரிந்து நதியாக ஓடுகிறாள். காவிரி பிறந்ததிலிருந்தே வெளியே வருவதில் பிரச்னை தான் போலும்!