பதிவு செய்த நாள்
07
டிச
2024
11:12
கோவை; ரேஸ்கோர்ஸ் ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலில் உள்ள, ஸ்ரீ சாரதாம்பாளுக்கு இன்று சிறப்பு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
கோவை, ரேஸ்கோர்ஸிலுள்ள ஸ்ரீ சாரதாம்பாளுக்கு, ஓராண்டில் மஹாளய அமாவாசை, நவராத்திரி பவுர்ணமி, அம்பாள் பிரதிஷ்டை தினம் ஆகிய மூன்று நாட்களில், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்நாளில் காலை 8:45 முதல் 11 :00 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி 45ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மஞ்சள்துாள், தயிர், பால், குங்குமம், பஞ்சாமிர்தம், கரும்பு, பால், தேன், பழ வகைகள். இளநீர் ஆகியவற்றை கொண்டு வேதவிற்பன்னர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.