திருவண்ணாமலை தீபத்திருவிழா; தங்க நாக வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2024 12:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நான்காம் நாள் விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை உற்சவத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் தங்க நாக வாகனத்தில் மாட வீதி உலா வந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மூஷிக வாகனத்தில் விநாயகர் மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.