கீழவளவு வீரகாளியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 10:12
மேலுார்; கீழவளவு வீரகாளியம்மன் கோயில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் கோயிலில் இருந்து தேரில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தபடி மந்தையை சென்றடைந்தார். கீழவளவு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு மற்றும் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மந்தையிலிருந்து தேரில் அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலுார் டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.