விருதுநகர்; விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அனுக்ஞ, விக்னேஸ்வர பூஜை, புண்யாச வாசனம், பஞ்ச கவ்யம் பூஜையுடன் துவங்கியது. இதில் மகாபூர்ணாஹூதி, பரிவாகரகம், மூலஸ்தனம், விமான அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் தலைவர் தங்கராஜன், நிர்வாகக் காரியதரிசி கனகவேல், உதவி தலைவர் சுந்தரவேல், உதவி காரியதரிசி ஆனந்தவேல் உள்பட நிர்வாகிகள் பலர் செய்தனர்.