சிவன்மலையில் கார்த்திகை மகா தீபம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 06:12
கூடலூர்; கூடலூர் நம்பலாக்கோட்டை சிவன் மலையில் ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கூடலூர், நம்பாலக்கோட்டை சிவன்மலை. சிவன் கோயிலில் மகா கார்த்திகை தீபம் திருவிழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 5:00 மணிக்கு துவங்கிய கிரிவலம் ஊர்வலத்தில், பக்தர்கள் ஓம் நமச்சிவாயா கோவில் மலையை சுற்றி வந்தனர். ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. மாலை 6:00 மணிக்கு சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை தலைவர் கேசவன் மகா தீபத்தை ஏற்றினர். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி குழு சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.