திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் கார்த்திகை விழா; முருகனுக்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 06:12
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை விழா நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து மாலை கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் தண்டபாணி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதிகளிலும் கார்த்திகையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.