செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 06:12
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மகா தீப திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி காலை கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. அன்று இரவு ருத்ர ஹோமமும், உற்சவர் கோயில் உலாவும் நடந்தது. 12ம் தேதி இரவு பைரவா ஹோமமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். 11 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு பெரிய கொப்பரையில் மகா தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.