பதிவு செய்த நாள்
19
டிச
2024
11:12
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனம . அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணப்பட்டு, ரூ. 27 லட்சம் காணிக்கைகளாக பெறப்பட்டிருந்தது. அதன் பிறகு, நடப்பாண்டின் இரண்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, உதவி ஆணையர் தனசேகர், கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், கோவில் ஆய்வாளர் செல்வப் பிரியா, அறங்காவலர் குழுவினர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் உள்ள சபா மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில், திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்டை சேர்ந்த பெண்கள் உள்பட 70 பேர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். அதில் 29 லட்சத்து 53 ஆயிரத்து 378 ரூபாய் ரொக்கம்,தங்க இனங்கள் 128 கிராம்,வெள்ளி இனங்கள் 2.78 கிலோ ஆகியவை காணிக்கையாக இருந்தது.