செய்யாற்று வெள்ளத்தில் அடித்து வந்த 2 அடி உயர முருகன் கற்சிலை மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2024 11:12
செய்யாறு; செய்யாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட, 2 அடி உயர முருகன் கற்சிலையை வருவாய்த் துறையினர் மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாற்றில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கன மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை, 3:00 மணியளவில், 2 அடி உயர, மயிலுடன் கூடிய குழந்தை முருகன் சிலை, ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. வருவாய்த் துறையினர் சம்பவ இடம் சென்று முருகன் சிலையை மீட்டு, அது எங்கிருந்து ஆற்றில் அடித்து வரப்பட்டது என, விசாரித்து வருகின்றனர்.