வடமதுரையில் சாஸ்தா திருக்கல்யாணம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2024 05:12
வடமதுரை; வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐயப்பன் கோயில் கட்டப்படுகிறது. இங்குள்ள தற்காலிக மணிமண்டபத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு மண்டல பூஜை விழா கடந்த டிச.12ல் மஞ்சமாதா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கணபதி பூஜை. சீர் அழைத்தல், சந்தனக்குடம் கொண்டு வருதல், பூர்ணத்தம்மன், புஷ்கலையம்மனுடன் சாஸ்தா திருக்கல்யாணம், விளக்கு பூஜை, மஞ்சள் மாதாவுக்கு பால்குடம் எடுத்தல் என வழிபாடுகள் நடந்தன. நாளை கன்னிச்சாமிகள் திருவாபரண பெட்டி துாக்குதல், பஜனை, முளைப்பாரி கரைத்தல், கருப்பர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.