திண்டுக்கல்லில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2024 05:12
திண்டுக்கல்; திண்டுக்கல் அனுமந்தநகரில் ஐயப்ப சுவாமிகள் குழுசார்பில் 18ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பரை வழிபட்டனர். இதை தொடர்ந்து காலை 5:00 மணி முதல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதிகளவிலான பக்தர்கள் ஐயப்பா பக்தி கோஷத்தோடு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. அ திண்டுக்கல் சுற்று பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.