காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள கொல்லாசத்திரத்தில், ஸ்ரீஸ்ரீதாராம பஜனை மண்டலி சார்பில், 32வது ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று நடந்தது. உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குருகீர்த்தனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ஸ்ரீராதா கல்யாண மஹோத்ஸவம் நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து, சிறப்பு கீர்த்தனைகள் நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.