பதிவு செய்த நாள்
25
டிச
2024
04:12
பல்லடம்; பல்லடம் அருகே, பயன்பாடற்ற கோவில் நிலத்தில், சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.
பல்லடத்தை அடுத்த, பெரும்பாளி பகுதியில், பொன்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 11.65 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, விற்பனை செய்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே, இந்த நிலம் பயன்பாட்டு புதன் மண்டி கிடக்கிறது. பயன்பாடின்றி கிடக்கும் இந்ந நிலத்தில், மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து. குறிப்பாக, இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தை பயன்படுத்தி நடந்து வரும் சமூக விரோத செயல்களால், வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் போலீசார் கூடுதல் ரோந்து பணி மேற்கொண்டு, சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.