ஒரே நேரத்தில் 3 கோயில்களில் பூட்டுகளை உடைத்து கொள்ளை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2024 03:12
எரியோடு; திண்டுக்கல் மாவட்டம் வடுகம்பாடி ஊராட்சி பண்ணைப்பட்டியில் அருகருகே காளியம்மன், மாரியம்மன் கோயில்களும், சில நூறு மீட்டர் தொலைவில் மதுரைவீரன் கோயிலும் உள்ளன. இக்கோயில்களில் கொள்ளை கும்பல் நேற்று இரவு பூட்டுகளை உடைத்து உண்டியலை திருடி சென்றனர். இன்று காலை கோயிலுக்குச் சென்ற பண்ணைப்பட்டி மக்கள் ஒரே நேரத்தில் 3 கோயில்களில் நடந்த திருட்டு சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.