Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை; பக்தர்கள் வழிபாடு திருவண்ணாமலை மகா தீப கொப்பரைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 டிச
2024
04:12

திருப்புல்லாணி; சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்காக கடந்த கார்த்திகை 1ம் தேதி மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.


சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை யாத்திரை காலம் கடந்த நவ., மாதம் 16ஆம் தேதி துவங்கியது. இதையொட்டி கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் யாத்திரை காலம் நிறைவாக இன்று சபரிமலையில் மண்டல பூஜை துவங்க உள்ளது. அதனை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே தினைக்குளம் சக்திவேல் முருகன் கோயில் அருகே உள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன் சன்னதியில் 16ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. தினைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பஜனை, நாமாவளி, கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் செய்து வழிபட்டனர். தலைமை குருசாமி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். உற்ஸவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் 18 படிகளிலும் கற்பூர ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரிஹரசுதன் சபரிமலை யாத்திரை சபா குழுவினர் செய்திருந்தனர்.


* பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டையில் சபரி சாஸ்தா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 20ம் ஆண்டு மண்டல ஆராட்டு விழா நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவமூர்த்தி ஐயப்பன் வீதி உலா நடந்தது. ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களின் வீடுகளில் முன்பாக உற்ஸவர் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு தேங்காய் உடைத்து பழம் நெய்வேத்தியம் செய்யப்பட்டது 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் நீர் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர். ஐயப்பன் கோயில் வளாகத்தில் மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உடலில் வண்ணப் பொடிகளை பூசியவாறு ஆடிவந்தனர். தலைமை குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar