திருத்தணி முருகன் கோவிலில் த.வெ.க., தலைவர் விஜய் தந்தை தியானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2026 07:05
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், த.வெ.க., தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், மகன் வெற்றிக்காக தியானம் செய்தார். த.வெ.க., தலைவர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான சந்திரசேகர், நேற்று காலை 6:30 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். மூலவர் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, மகன் விஜய் மற்றும் அக்கட்சி போட்டியிட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என வழிபட்டார். மேலும், விஜய் முதல்வராக வேண்டும் என, அரை மணி நேரம் தியானம் செய்தார்.