திருவடாானை; திருவெற்றியூர் கோயில் தெப்பக்குளம் நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் ஆடி, சித்திரையில் நடைபெறும் திருவிழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். இக்கோயிலில் முதல் நாள் தங்கியிருந்து மறுநாள் காலை தெப்பக்குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்வது சிறப்பு. கடந்த மூன்று ஆண்டுகளாக போதுமான மழை பெய்ததால் தெப்பக்குளம் நிரம்பியது. அதே போல் இந்த ஆண்டும் பருவமழை பெய்ததால் தெப்பக்குளம் முழுமையாக நிரம்பியதை பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.