பதிவு செய்த நாள்
27
டிச
2024
05:12
விருத்தாசலம்; பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை சிவதாணு பிள்ளை தனது குடும்பத்தினருடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் ‘காசியை விட வீசம் அதிகம்’ என்ற பெருமை பெற்றது. இந்த கோவிலில் மாசி மக பெருவிழா வெகு விமர்சையாக நடக்கும். மேலும், இந்த கோவில் 5 கோபுரம், 5 கொடிமரம், 5 நந்தி, 5 மண்டபம் இருப்பதால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. இந்த கோவிலும் தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை, இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை இன்று காலை 9:30 மணியளவில் குடும்பத்தினருடன் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது, விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை அம்மன், ஆழத்து விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளை குடும்பத்தினருடன் வழிபட்டு சென்றார்.