புதுச்சேரி; புதுச்சேரி, பாரதி வீதியில் பிரசித்திப்பெற்ற உலக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி பூர்த்தியையொட்டி ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.