பதிவு செய்த நாள்
28
டிச
2024
10:12
திருப்பூர்; கோவை பாரதியார் பல்கலை ஆட்சிப் பேரவை உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரிய குமார் எழுதியுள்ள ‘கும்பகோணம் வட்டார கோயில்கள்’ என்ற புத்தகத்தை ‘தினமலர்’ குழுமம், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. நுால் வெளியீட்டு விழா, திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள ரமணாஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. ஓட்டல் பங்குதாரர் மதுசூதனன் நுால் வெளியிட, வக்கீல் கீர்த்தி கண்ணன் பெற்றுக் கொண்டார்.
நுாலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது: கும்பகோணத்தை சுற்றியுள்ள பல்வேறு கோவில்கள், வரலாற்று ரீதியாகவும், பரிகார வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் ஆகிய வற்றுக்கு பரிகாரம் செய்யக்கூடிய கோவில்கள், கும்பகோணம் வட்டாரத்தில் நிறைந்துள்ளன. கொங்கு மண்டலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நுால் எழுதப்பட்டுள்ளது. கோவில் குறித்த தல வரலாறு, வரலாற்று முக்கியத்துவம் பரிகாரங்கள் ஆகிய வற்றுடன், கோவிலின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், பக்தர்களுக்கு இந்த நுால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார். விநாயக விகாஸ் பள்ளி தாளாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.