விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி பெரியவர் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2024 11:12
விழுப்புரம்; சங்கரமடத்தில், வேதசம்ரக்ஷன அறக்கட்டளை சார்பில் 31வது ஆண்டு, காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை விழா நேற்று தொடங்கியது. விழுப்புரத்தில் உள்ள சந்திரசேகரேந்திரர் அவதார தலத்தில், காலை 7.00 மணிக்கு கணபதி, கோ பூஜையுடன் ஆராதனை தொடங்கியது. தொடர்ந்து, ருத்ர ஏகாதசி விசேஷ, அபிஷேகமும், ஆராதனை வழிபாடுகளும், வேதபாராயண மும் நடந்தது. மூலவர் சுவாமிகள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6.00 மணிக்கு மயிலாப்பூர் கணேச சர்மா அவர்களின் மகா பெரியவர் மகிமை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.