நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் சனிப்பிரதோஷ வழிபாடு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2024 06:12
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத சனிப் பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தனர். இதில் இருந்து முதலில் தோன்றிய விஷத்திலிருந்து இந்த உலக உயிர்களை காப்பாற்றுவதற்கா சிவபெருமான் இந்த ஆலாகால விஷத்தை அருந்தினார். உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சி நடந்த நாள் சனிக்கிழமை. இதனால் தான் சனிப்பிரதோஷம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ வேளையின்போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்படி நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில் இன்று (28ம் தேதி) சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு விபூதி, மஞ்சள், பால் தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.