பதிவு செய்த நாள்
29
டிச
2024
07:12
ஊட்டி; ஊட்டி ஆஞ்ஜநேயர் கோவிலில் 9 நாட்கள் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.
ஊட்டியில் உள்ள அருள்மிகு ஆஞ்ஜநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி மஹோற்ச திருவிழாவை ஒட்டி , அமாவாஸ்யை திதியும் , மூலம் நட்சத்திரத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை ஒட்டி , 9 நாட்கள் உற்சவ ஆரம்பம் , மஹா சதர்சண ஹோமம் , வாழைப்பழ அலங்காரம் , வெற்றிலை சாத்து அலங்காரம் , விசேஷ அலங்காரம் , கனி அலங்காரம் , சந்தனகாப்பு அலங்காரம் , வெண்ணை காப்பு அலங்காரம் , உலர் பழங்கள் அலங்காரம் நடந்தது. இன்று காலை 9:00 மணியளவில் விசேஷ ஹோமம் , விசேஷ பூஜை நடந்தது. 11:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம் , விசேஷ அலங்கார பூஜை நடந்தது. இதில் , திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நாளை காலை , 6:30 மணிக்கு ஹனுமத் ஜெயந்தி , ராஜ மாருதி அலங்காரத்தை தொடர்ந்து , 3:00 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.