காரமடை ராகவேந்திரர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 11:12
கோவை; காரமடை ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஹனுமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.