கதிர் நரசிங்க பெருமாள் கோயிலுக்கு தங்க கருடன் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2024 11:12
ரெட்டியார்சத்திரம்; திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலுக்கு பக்தர் ஒருவர் தங்க கருட வாகனத்தை நேர்த்திக்கடனாக செலுத்தினார். ரெட்டியார்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற கோபிநாத சுவாமி கோயிலின் உபகோயிலாக கொத்தப்புள்ளியில் கதிர் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இதற்கான கும்பாபிஷேகப்பணிகள் நடக்கிறது. முன் மண்டபம் கட்டுதல், தரைதளம், கோயில் கோபுரம், பரிவார தெய்வ சன்னதிகளுக்கான வர்ணப் பூச்சு உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேர்த்திக்கடனாக பலர் நிறைவேற்றுகின்றனர். கோயிலில் சுவாமி ஊர்வலம் வரும்போது கருட வாகனம் இல்லை. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் போழியம்மனுாரை சேர்ந்த பக்தர் ஒருவர், நேர்த்திக்கடனாக ரூ.9 லட்சம் மதிப்பிலான தங்க கருட வாகனத்தை கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.