பதிவு செய்த நாள்
31
டிச
2024
11:12
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மடத்திக்காடு அக்னியாற்றில், தடுப்பணை உள்ளது. தடுப்பணை கரையை ஒட்டிய மணல் பகுதிகளில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் பனை விதைகளை நட்டு வைத்து, விளைந்த பனங்கிழங்குகளை தோண்டி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மடத்திக்காடு கிராமத்தை சேர்ந்த முருகேசன், 30, என்பவர், பனங்கிழங்குகளை தோண்டி எடுத்த போது, 1.5 அடி உயர கருங்கல்லாலான காலபைரவர் சிலை கிடைத்தது. அந்த சுவாமி சிலைக்கு, கிராம மக்கள் மாலையிட்டு வழிபட்டனர். திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆர்.ஐ., புவனா, துறுவிக்காடு வி.ஏ.ஓ., விக்னேஷ் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள், சிலையை கைப்பற்றி, பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமாரிடம் ஒப்படைத்தனர்.