பதிவு செய்த நாள்
31
டிச
2024
11:12
காஞ்சிபுரம்; மார்கழி மாத சோமவார அமாவாசையையொட்டி, காஞ்சிபுரம் கச்ச பேஸ்வரர் கோவிலில் அரச மரத்தடியில் உள்ள நாகசிலைகளுக்கு நேற்று நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூஜை செய்தனர். இதில், திருமணமான பெண்கள் குழந்தைபாக்கியம் வேண்டியும், சுமங்கலி பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், திருமணமாகாத ஆண்கள், பெண்கள், தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும் நாக சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். அரச மரத்தடியில் உள்ளபாம்பு புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். இதில், பரிகார பூஜையாக, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி கயிறு உள்ளிட்டவற்றை வழங்கி, அரச மரத்தை வலம் வந்து வழிபட்டனர்.