பதிவு செய்த நாள்
31
டிச
2024
05:12
கருமத்தம்பட்டி; கரவழி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ஜெயந்தி விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது. சூலூர் அடுத்த கரவழி மாதப்பூரில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம், எட்டாம் ஆண்டு விழாவும், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவும் விமரிசையாக நடந்தது. காலை, 7:30 மணிக்கு, ஹரி வாயு ஸ்ருதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது..10:00 மணிக்கு, பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேக பூஜை நடந்தது. 12:30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. முத்தங்கி அலங்காரத்தில், ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாருதி கலைக்குழு, ஸ்ரீ னிவாச பெருமாள் கலைக்குழுவின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. கரிய மாணிக்க பெருமாள் பஜனை குழுவின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பஜனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு மாருதி கலைகுழுவின் கோலாட்டமும், அச்சம்பாளையம் சண்முகத்தின் நாம சங்கீர்த்தனமும், சங்கம் நாட்டுப்புற கலைக்குழுவின் கம்பத்து ஆட்டமும் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.